எழுத்துகளின் பிறப்பு

  • உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் – (அ, ஆ, இ, ஈ, உ,ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,ஔ) கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
  • வல்லின மெய் எழுத்துகள் ஆறும் – (க், ச், ட், த், ப், ற்) மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
  • மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் – (ங், ஞ், ண், ந், ம், ன்) மூக்கை இடமாகக் கொண்டு பிறக்கின்றன. 
  • இடையின மெய் எழுத்துகள் ஆறும் – (ய், ர், ல், வ், ழ், ள்) கழுத்தை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.
  • ஆய்தமாகிய சார்பெழுத்து, தலையை இடமாகக்கொண்டு பிறக்கிறது.