எழுத்திலக்கணம்
எழுத்து
எழுத்திலக்கணத்தில் எழுத்தின் வகைகள் , அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துகள் பிறக்கும் முறை ,சந்தி இலக்கணம் ஆகியவை இடம்பெறும்.
தமிழ் எழுத்துகள் இரண்டு வகைப்படும்.
- முதல் எழுத்து – முதலெழுத்துகள் தாமே தனித்து இயங்குவன , இவ்வெழுத்துகள் ஏனைய உயிர் மெய்யெழுத்துகள் பிறப்பதற்கு முதன்மையாய் இருப்பதாலும் இவை முதல் எழுத்துகள் எனப்பட்டன.
- சார்பெழுத்து – சார்பெழுத்துகள் முதல் எழுத்துகளைச் சார்ந்து இயங்குவன. சார்பெழுத்து என்பது காரணப் பெயராகும். எழுத்துகள் ஒலி வடிவில் ஒன்றையொன்று சார்ந்து வருவதால் சார்பெழுத்தாயிற்று.
Related Tags
#

