மெய்ம்மயக்கம்
மயக்கம் என்பது சேர்ந்து வருதலைக் குறிக்கும். இரண்டு மெய் எழுத்துகள் சேர்ந்து வருதலைக் குறிப்பது மெய்ம்மயக்கம் எனப்படும்.
மெய்ம்மயக்கம் இரண்டு வகைப்படும். அவை:
உடன்நிலை மெய்ம்மயக்கம்
உடனிலை மெய்ம்மயக்கம் என்பது சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து இரட்டித்து வருவதைக் குறிக்கும்
(எ.கா) அச்சம் – அச்சம் என்ற சொல்லில் உள்ள ச் என்பது அச்ச்+அம் என இரட்டித்து வந்துள்ளதைக் காண்க. இவ்வாறு ஒரு மெய்யெழுத்து அடுத்தடுத்து(உடனுடன்) வருவதை உடனிலை மெய்ம்மயக்கம் எனப்படுகிறது. இவ்வாறு (ர் ,ழ் ) தவிர பிற பதினாறு மெய்யெழுத்துகளும், உடனிலை மெய்ம்மயக்கத்தில் அமைகின்றன. மேற்கண்ட பதினாறு எழுத்துகளுள், க, ச, த, ப என்ற நான்கு மெய்யெழுத்துகள் உடனிலை மெய்ம்மயக்கத்தில் மட்டுமே அமைகின்றன.
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
ஒரு சொல்லின் இடையில் ஒரு மெய்யெழுத்திற்கு பக்கத்தில் வேறு ஒரு மெய்யெழுத்து வந்து நிற்பதை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படுகிறது.
(எ.கா) அங்கம் – அங்கம்(அங்க்+அம்) என்ற சொல்லில் ங் என்ற எழுத்திற்குப் பக்கத்தில் க் என்ற எழுத்து இணைந்து வந்துள்ளதைக் காண்க. இவ்வாறு ஓர் எழுத்துக்குப் பக்கத்தில் அதே எழுத்து அல்லாமல் வேறுவொரு எழுத்து வந்து இணைவது வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகும். மெய்எழுத்துகள் பதினெட்டில் க், ச், த், ப் என்னும் நான்கு மெய் எழுத்துகள் தவிர்த்து, ஏனைய பதினான்கு மெய்எழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்தில் வரும்.
Related Tags