மொழி முதல் எழுத்துகள்

      பன்னிரண்டு உயிர்எழுத்துகளும்  க ,ச ,த ,ந ,ப ,ம ,வ ,ய , ஞ ,ங என்னும் பத்து உயிர்மெய்யெழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும்.

(எ.கா)

  • அம்மா,ஆமை
  • கனி ,கிளி ,ஞமலி , நண்டு , மாலை

      மெய் எழுத்துகளும்  , ட, ண, ர, ல, ழ, ள, ற, ன என்னும் எட்டு உயிர்மெய் எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருவதில்லை.  ரகர வருக்க எழுத்துகளும் லகர வருக்க எழுத்துகளும் தமிழ்மொழியில் சொல்லுக்கு முதலில் வருவதில்லை என்பதை அறிந்து அவற்றுக்கு முன் ‘இ’ என்னும் எழுத்தைச் சேர்த்து அப்பெயர்களை எழுதுகிறோம்.

  • ராணி  ->  ராணி
  • லாடம்  ->  லாடம்

சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துகள்

      உயிர் எழுத்துகள் தனியாகச் சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும். சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வருவது இல்லை; மெய் எழுத்துடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்தாகவே சொல்லுக்கு இடையிலும் இறுதியிலும் வரும். மெய் எழுத்துகள் இயல்பாகவே சொல்லுக்கு இறுதியில் வரும். குற்றியலுகரமும் சொல்லுக்கு இறுதியில் வரும்.

(எ.கா) பெண் , கீழ் , ஆறு,பழகு

மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்

  • மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா.
  • ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
  • ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
  • ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.