மாத்திரை

      மாத்திரை என்பது ஓர் எழுத்தை எவ்வளவு நேரம் ஒலிக்கிறோம் என்று கூறுவதாகும். ஒவ்வோர் எழுத்தையும் குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று வரையறை செய்து வைக்கப்பட்டுள்ளது. மாத்திரை இரண்டு விதமான அளவுகளில் விளக்கப்படுகிறது.

  • மனிதர்கள் இயல்பாகக் கண் இமைக்கும் நேரம்.
  • மனிதர்கள் இயல்பாகக் கை நொடிக்கும் (சொடுக்குப் போடும்) நேரம்.

      இவை ஒரு மாத்திரை எனப்படும். எழுத்துகள் கீழ்வருமாறு ஒலிக்கப்பட வேண்டும்.

      மேலே குறிப்பிட்ட விதத்தில் எழுத்துகளை ஒலிக்கவேண்டும். எனினும், இந்த வரையறை சில இடங்களில் மீறப்படுவதும் உண்டு. இசை பாடும்போதும், ஒருவரை விளிக்கும்போதும், பொருள்களைக் கூவி விற்கும் போதும் இந்த வரையறையை மீறி ஒலித்தலும் உண்டு.