போலி

      சொற்களில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு ஓர் எழுத்து வருவதைப் போலி என்று கூறுவர். அப்படி வேறு எழுத்து வரும்போது பொருள் மாறாமல் இருக்க வேண்டும். போலி எழுத்துகள் சொல்லின் முதலிலும், இடையிலும், இறுதியிலும் வரும். இவற்றை முறையே முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி என்று கூறுவர்.

முதற்போலி

      ஒரு சொல்லின் முதல் எழுத்து, போலியாக வருவதை முதற்போலி என்று கூறுவர்.

  • மயல்  ->  மையல்

இடைப்போலி

      சொல்லுக்கு இடையில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இடைப்போலி ஆகும்.

  • அரயர்  ->  அரையர்

இறுதிப்போலி

      சொல்லின் இறுதியில் ஓர் எழுத்து வரவேண்டிய இடத்தில் வேறு எழுத்து வருவது இறுதிப் போலி எனப்படும். இதைக் கடைப் போலி எனவும் கூறுவர்.

  • முகம்  ->  முகன்

முற்றுப்போலி

      ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.

  • ஐந்து  ->  அஞ்சு

#