முதல் எழுத்து
மொழிக்கு முதற்காரணமாக இருக்கும் உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் , மெய் எழுத்துகள் பதினெட்டும் ஆகிய 30 எழுத்துகளும் முதல் எழுத்துகள் எனப்படும்.
உயிர் எழுத்துகள் – 12 – அ, ஆ, இ, ஈ,உ ,ஊ ,எ ,ஏ ,ஐ ,ஒ ,ஓ , ஒள
மெய் எழுத்துகள் – 18 – க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், ழ், ள், வ், ற், ன்
முதல் எழுத்துகள் – 12+ 18 = 30
குறில் (Short Vowels)
உயிரெழுத்துகளில் குறுகிய ஒலிப்புக் கால அளவு அதாவது ஒரு மாத்திரை அளவு மட்டுமே கொண்டிருக்கும் எழுத்துகள் குறில் அல்லது குற்றெழுத்து ஆகும். அவை
நெடில் (Long Vowels)
உயிரெழுத்துகளில் நீண்ட ஒலிப்புக் கால அளவு அதாவது இரண்டு மாத்திரை அளவு கொண்டிருக்கும் எழுத்துகள் நெடில் அல்லது நெட்டெழுத்து ஆகும்.
மெய்யெழுத்துகள் (Consonants) - 18
மெய்யெழுத்துகள் பதினெட்டாகும். மெய்யெழுத்துகளை ஒற்று, ஒற்றெழுத்து , புள்ளி எழுத்துகள் என்றும் கூறுவது உண்டு.
மெய்எழுத்துகள் வல்லினம், மெல்லினம் ,இடையினம் என்று ஒலியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு உள்ளன.
வல்லினம் (Hard Consonants)
மெல்லினம் (Soft Consonants)
இடையினம் (Medial Consonants )
Related Tags